
அருகில் சென்று காண்கிறேன்
பிம்பங்களில் தெரிவது நீயடா ,,,,,,,,,
சிதைந்த இதயத்தில்
உருகிய காயங்கள்
இரத்தம் கசியவில்லை
உன் நினைவுகள் கசியுதடா ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அள்ளி அள்ளி சேர்த்து வைத்தேன்
உன் காதல் மரகதங்களை
இன்று காற்று வீசியதும்
நீ பறக்க துடிப்பது ஏனடா,,,,,,,,,,,,,,,,
என் சுவாசத்தில் தானே
உன் சுவாசத்தை சேமித்தேன்,,,,,
இன்று சுவாசம் இருந்தும்
மூச்சு திணறல் ஏனடா,,,,,,,,,,,,,
உன் காதல் அணைப்பில்
உலகை மறந்தேன்,,,,,
ஆனால் இன்று உலகம்
என்னை மறந்து நான் தனிமை காண்பது ஏனடா,,,,,,,,,,,,,,,
இதயம் முழுதும் உன்னை சுமந்தேன்,,,,,
அந்த இதயதுக்கே நான் சுமையாய் போனது ஏனடா,,,,,,
கனவில் கூட உன் முகம் தானே
என் உறக்கம் தொலைந்தது தெரிகிறதா,,,,,,,,,,,,
வாழும் நாட்கள் கடைமுனை மட்டும்
உன் காதலை சுமக்கும் அடிமை நானாடா ,,,,,,,,,,,
கடந்து வந்த பாதைகளை திரும்பபார்கிறேன்,,,,
வசந்தம் காலம் மீண்டும் பிறந்திடுமா
என் அன்பே,,,,,,,,,,
No comments:
Post a Comment