
நம் இதழ்கள் பிரிந்து
பேசியதில்லை இதுவரை
தினம் உன் பாத கொலுசு
பேசியது என் கண்களோடு,,,,,,,,,
தினம் நீ சிந்தும் புன்னகைக்கு
மறுமொழிதான்
என் இதழ் சிந்தும் புன்னகை ......
பாஷை அறியாமல் பேசிகொண்டது
நம் விழிகள் .......
இருந்தும் களைய வில்லையே
உன் மௌனம்
என் கல்லறை வாசலில்
நீ செலுத்திய மௌன அஞ்சலி ,,,,
No comments:
Post a Comment