
உனக்காக தோன்றிய கவிதை
என் மனதோடு விதை போட்ட கவிதை,,,,
என் நினைவோடு துளிர்விட்ட கவிதை,,,,,
இருந்தும் எழுத இயலவில்லை
என் விரல் கொண்ட பேனாவுக்கு ,,,,,
பேனாவின் நுனியினில் வடிவம் பெரும்
எழுத்துகள் போலே,,,
என் மனதோடு உரு பெரும் உன் கவிதை,,,.,
இருந்தாலும் எழுத மனமில்லை.....
எண்ணங்களில் தொடர்கிறது
உன்னை பற்றிய கவிதை,,,,,,,
வெள்ளை ஏடுகளில் எழுதி
கவிதையை முடிக்க மனமில்லை,,,,,
தினம் தினம் தொடர்கிறது
உன்னை பற்றிய கவிதை
இருந்தும் எழுத மனமில்லை.......
மீண்டும் விழி சாய்கிறேன்
எழுதாத உன் கவிதைகளின்
நினைவுகளோடே,,,,,,,,,,,
No comments:
Post a Comment