Friday, August 7, 2009
தினம் மஞ்சள் நீராடும்
கன்னங்கள் பூசும்
நாணசிவப்பு
அவள் மெல்ல
சிரிக்கையிலே
உதிர்ந்து போகுதம்மா
ரோஜா இதழ்கள்,,,,,,,
மின்னித்தெரித்திடும் கண்கள்
விண்மீனின் இரட்டை குழந்தையோ,,,,,
மான்விழியில்
தீட்டிய மைதான்
கரு இருளின் சீதனமோ,,,,,,,
நீ மெல்ல நடக்கையிலே
வீழ்ந்து போகிறேனம்மா
உன் அன்ன நடையிலே ,,,,,,
தினம் எண்ணி எண்ணி
நான் உறைந்து போகிறேனம்மா
இயட்கை தந்த
என் அழகு குறிப்பே,,,,,,,,,,,,,,,

உனக்காக தோன்றிய கவிதை
என் மனதோடு விதை போட்ட கவிதை,,,,
என் நினைவோடு துளிர்விட்ட கவிதை,,,,,
இருந்தும் எழுத இயலவில்லை
என் விரல் கொண்ட பேனாவுக்கு ,,,,,
பேனாவின் நுனியினில் வடிவம் பெரும்
எழுத்துகள் போலே,,,
என் மனதோடு உரு பெரும் உன் கவிதை,,,.,
இருந்தாலும் எழுத மனமில்லை.....
எண்ணங்களில் தொடர்கிறது
உன்னை பற்றிய கவிதை,,,,,,,
வெள்ளை ஏடுகளில் எழுதி
கவிதையை முடிக்க மனமில்லை,,,,,
தினம் தினம் தொடர்கிறது
உன்னை பற்றிய கவிதை
இருந்தும் எழுத மனமில்லை.......
மீண்டும் விழி சாய்கிறேன்
எழுதாத உன் கவிதைகளின்
நினைவுகளோடே,,,,,,,,,,,
Friday, July 3, 2009
சுமைகள்
Thursday, July 2, 2009
கண்ணாடி சிதறல்கள் அருகில் சென்று காண்கிறேன்
பிம்பங்களில் தெரிவது நீயடா ,,,,,,,,,
சிதைந்த இதயத்தில்
உருகிய காயங்கள்
இரத்தம் கசியவில்லை
உன் நினைவுகள் கசியுதடா ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அள்ளி அள்ளி சேர்த்து வைத்தேன்
உன் காதல் மரகதங்களை
இன்று காற்று வீசியதும்
நீ பறக்க துடிப்பது ஏனடா,,,,,,,,,,,,,,,,
என் சுவாசத்தில் தானே
உன் சுவாசத்தை சேமித்தேன்,,,,,
இன்று சுவாசம் இருந்தும்
மூச்சு திணறல் ஏனடா,,,,,,,,,,,,,
உன் காதல் அணைப்பில்
உலகை மறந்தேன்,,,,,
ஆனால் இன்று உலகம்
என்னை மறந்து நான் தனிமை காண்பது ஏனடா,,,,,,,,,,,,,,,
இதயம் முழுதும் உன்னை சுமந்தேன்,,,,,
அந்த இதயதுக்கே நான் சுமையாய் போனது ஏனடா,,,,,,
கனவில் கூட உன் முகம் தானே
என் உறக்கம் தொலைந்தது தெரிகிறதா,,,,,,,,,,,,
வாழும் நாட்கள் கடைமுனை மட்டும்
உன் காதலை சுமக்கும் அடிமை நானாடா ,,,,,,,,,,,
கடந்து வந்த பாதைகளை திரும்பபார்கிறேன்,,,,
வசந்தம் காலம் மீண்டும் பிறந்திடுமா
என் அன்பே,,,,,,,,,,
Sunday, June 28, 2009
காதல் வானிலே
Tuesday, June 23, 2009
நட்பு என்றும் நலம் குன்றாது,,,,,,ஆயிரம், நோய் தாக்கி பல்லாயிரம் பாதளம் வந்தாலும் நட்புக்கு இல்லை அழிவு என்றும் நலமே உருவாக உயிர்ப்பிக்கும் அழியா வரம் நட்
நட்பு என்றும் நலம் குன்றாது,,,,,,
ஆயிரம், நோய் தாக்கி
பல்லாயிரம் பாதளம்
வந்தாலும் நட்புக்கு இல்லை அழிவு
என்றும் நலமே உருவாக
உயிர்ப்பிக்கும் அழியா வரம் நட்பு
நட்பு என்றும் நலம் குன்றாது,,,,,,ஆயிரம், நோய் தாக்கி
பல்லாயிரம் பாதளம்
வந்தாலும் நட்புக்கு இல்லை அழிவு
என்றும் நலமே உருவாக
உயிர்ப்பிக்கும் அழியா வரம் நட்பு
Subscribe to:
Comments (Atom)


இதயம் எனும் உருகும் மெழுகில்


