
உனக்காக நான் சொல்ல காத்திருக்கும்
வார்த்தைகளின் நீளங்களை நான் அடுக்கி வைக்கட்டுமா
அது விண்வெளியையும் தாண்டி செல்லும்,,,,,,,,,,,
இருந்தும் ஏனடா உன்னை கண்டதும்
என் இதழில் மௌனம் குடிகொள்கிறது,,,,,,
நீ பேசும் நேரத்தில் மட்டும் நான்
வார்தைகளை வேட்டையாடுகிறேன்,,,,,,
இருந்தும் என்ன பயன்,,,,,
என் எண்ணம் அறிந்து
வார்த்தைகள் தப்பி விட்டன
பறவைகளைபோல
ஆனால் அன்பே நீ பேசும் வார்த்தைகளை மட்டும்
ஒன்று விடாமல் சேகரிக்க முடிகிறது என் இதயத்திற்கு
நீ சென்ற பிறகும் நீ பேசிச்சென்ற வார்த்தைகளை அசைபோடும்
என் எண்ணங்களை என்னால் சிறைபிடிக்க முடியவில்லை,,,,,,,
இப்போதுதான் புரிகிறது,,,,,,,,
என்னைவிட என் இதயதிட்கு
உன் மீது கொண்ட காதல் ஆழம் என்று,,,,,,,,,,,
மீண்டும் உன் வரவுக்காக காத்திருக்கிறேன்,,,,,
அன்பே
உன்னை கண்டதும் என் இதழ்கள் கொண்ட
மௌன யுத்தத்தை நீ வென்று போ,,,,,,,,,,,,,,,,,,,,
உனக்காக காத்திருக்கிறேன்
ReplyDeleteகாலங்கள் நீள்கிறது
தவம் கூட வரமே
காதலில்.....
காத்திருந்தேன்...
வருகிறாய்,
கரைகிறேன்...
பிரிகிறாய்,
காத்திருக்கிறேன் கரைவதற்கு...
ஒரு சந்திப்பிற்கும்,
மறு சந்திப்பிற்கும்
உண்டான காத்திருத்தலின்
இடைவெளியை
உருட்டி செய்தது தான்
ஆலகால விஷமென்பேன்....
மதியமும் வேண்டாம்,
மாலையும் வேண்டாம்,
முழுநாளையும்..
உன்னைக்கொண்டு மட்டுமே
உருவாக்குவேன்....
காத்திருக்கிறேன்..
கணப்பொழுதுகள்
கனப்பொழுதுகளாகின்றன...